பிரம்மாண்டமாக தளபதி 65 படத்தின் செட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விஜய் சொன்ன வார்த்தையால் மொத்தமாக வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Vijay Order to Thalapathy65 Team : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட மால் போன்ற செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

பிரம்மாண்டமாக உருவான தளபதி 65 செட்.. விஜய் சொன்ன வார்த்தையால் மொத்தமாக நின்ற வேலை.!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் கோர் தாண்டவம் ஆடி வருவதால் படத்தின் செட் அமைக்கும் பணிகளை விஜய் நிறுத்த சொல்லி உத்தரவிட அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் நலன் முக்கியம் என்பதால் விஜய் இவ்வாறு கூறியதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.