தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை இதுதான்: விஜய் பரபரப்பு பேச்சு..

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய்,

‘யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். நீ பாஸிசம்.. நீ அது.. நீ இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன்.

மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு.

ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை . வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள் இந்த கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலையை இங்கு எடுபடாது.

இறங்கியாச்சு. இனி எதைப்பத்தியும் யோசிக்க கூடாது. நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம். ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்ய போறோம். பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள்.

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும்.. ஒரு கட்சி.. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது. தவெக அறிவிக்கும் போதே கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும்.

நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது.. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறி உள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்சன் கபடதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்சன் கபடதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும். “

முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் இருக்கிறார்களே.. அவர்களும் நம்முடைய எதிரிகள்தான். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையிலெடுக்கப் போவதில்லை. நம்மள பாத்து யாரும் விசிலடிஞ்சான் குஞ்சு என சொல்லிட கூடாது.

பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக. ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு. அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அத கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய்., என்று விஜய் பேசி இருக்கிறார்.