Vijay in Shahjahan Movie Secrets
Vijay in Shahjahan Movie Secrets

தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Vijay in Shahjahan Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் இவர் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போதெல்லாம் குடும்பம், சமூகம் சார்ந்த ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வரும் தளபதி ஒரு கட்டத்தில் தொடர்ந்து காதல் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த விஜய் – வெளியான அதிர்ச்சி காரணம்!

அப்படியான காலகட்டத்தில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான காதல் திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தை இயக்குனர் ரவி இயக்கி இருந்தார்.

தளபதி விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த இப்படத்தில் முதலில் நடிக்க இருப்பது விஜய் இல்லை. ஆம், ஹீரோவாக நடிகர் ஷாம் தான் நடிக்க இருந்தாராம்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்த படத்தை நிராகரிக்க இந்த வாய்ப்பு தளபதி விஜயின் கைக்கு வந்துள்ளது.

தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.