Thalapathy Vijay Rejected Ponniyin Selvan
Thalapathy Vijay Rejected Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy Vijay Rejected Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர்.

இவர் தற்போது தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம், ஜெயராம் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக நாயகனாக நடிக்க மணிரத்னம் விஜயை தான் அணுகியுள்ளார். இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என விஜய் மறுத்துள்ளார்.

அதற்கான காரணம் ஒரு வருடம் முழுவதும் விஜய்யின் கால்ஷிட் கேட்டது தான் என கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு கும் இந்த படத்தை நிராகரித்துள்ளார்.

அவர் இரண்டாவது ஹீரோவாக நடிக்க முடியாது என இந்த படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

விறுவிறுப்பாக நடந்து வந்த பொண்ணியின் செல்வன் முதற்கட்ட படப்பிடிப்போடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

OMG.. விஜய்க்கு ஹிட் கொடுத்த குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தளபதி நடிக்க அஜித் தான் காரணம் – இதை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் சூட்டிங்கும் தடைப்பட்டுள்ளது.

அதே போல் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸும் கொரானா வைரஸ் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி போய் வருகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.