தனக்கே தெரியாமல் தன்னுடைய படத்தின் மூலமாக சிறுவன் ஒருவருக்கு உதவியுள்ளார் தளபதி விஜய்.

Vijay Helps to Small Boy : சென்னை அண்ணாசாலை அருகே தன் மாமாவுடன் சிறுவன் ஒருவன் சென்று கொண்டே இருந்துள்ளார். பைக் சென்று கொண்டிருந்த நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் அந்தச் சிறுவன் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தனக்கே தெரியாமல் தளபதி விஜய் செய்த உதவி.. காப்பாற்றப்பட்ட சிறுவன்.!!

இதனையடுத்து அந்த சிறுவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தையல் போட்டு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு முடிவு செய்துள்ளது. வலி தெரியாமல் இருக்க ஊசி செலுத்த டாக்டர்கள் முயன்றபோது அந்த சிறுவன் அலறி அழுதுள்ளார்.

இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்

சிகிச்சை அளிக்க விடாமல் செய்துள்ளார். இதனையடுத்து அந்த வழியாக வந்த தன்னார்வலர் ஒருவர் அந்த சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தேன் உனக்கு என்ன பிடிக்கும் என கேட்க தனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவருடைய பாடல்கள் படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும் என வலியையும் பொருட்படுத்தாமல் விஜய் குறித்துப் பேசியுள்ளார்.

சென்னையில் Suirya 40 படப்பிடிப்பு – படக்குழுவினருக்கு சூர்யா சொன்ன அறிவுரை! | Pandiraj | D.Imman

இதனையடுத்து அவர் தன் செல்போனில் இருந்து பிகில் படத்தை அந்த சிறுவனுக்கு போட்டு காண்பிக்க அந்த சிறுவனும் உற்சாகமாக படத்தை பார்க்க தொடங்கியுள்ளார். இந்த நேரத்தில் சிறுவனுக்கு வலிக்காமல் இருக்க மறுப்பு ஊசி போட்டு தையலும் போட்டு முடித்துள்ளனர் மருத்துவர்கள்.

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் விஜய்க்கு நன்றி கூறி வருகின்றனர்.