
மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு எச்சரித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து வரும் தீபாவளிக்கு லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் இயக்குனர் மிஷ்கின் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் முழு படத்தையும் பார்த்து சூப்பராக இருப்பதாக விமர்சனம் கூறியதாக தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த பேட்டியில் விஜயை ஒருமையில் பேசி இருந்தது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவு கெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’ என தெரிவித்துள்ளனர்.
இதனால் சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.