Vijay Fans Birthday Wishes to Ajith
Vijay Fans Birthday Wishes to Ajith

அஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் செய்த செயல் பலரையும் மிரள வைத்துள்ளது.

Vijay Fans Birthday Wishes to Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனால் அஜித் ரசிகர்கள் பல ஹாஸ்டேக்களை உருவாக்கி ட்ரெண்டிங்கில் இதனை கொண்டாடுவார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாம் எதிர்பார்த்தபடியே தற்போது ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகள் அஜித்தை பற்றியே ட்ரெண்டிங்கில் ஆக்கிரமித்துள்ளன.

ரசிகர் கேட்டதும் வெயிட்டான வலிமை அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா – அட்டகாச பதிவுடன் இதோ விவரம்.!

ஆனால் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கும் விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு பாசிட்டிவாக ட்ரெண்ட் செய்வார்கள் என்பது எதிர்பார்க்காத ஒன்று. அது தற்போது நடந்துள்ளது.

ஆம் விஜய் ரசிகர்கள் நண்பர் அஜித் என்ற பெயரில் ஒரு ஹாஸ்டேக் உருவாக்கி பாசிட்டிவான விஷயங்களை பேசி வருவது பலரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விஜய் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளவாசிகள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.