Yuvan About Valimai BGM
Yuvan About Valimai BGM

ரசிகர் கேட்டதும் வலிமை படத்தின் பிஜிஎம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

Yuvan About Valimai BGM : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரிக்கிறார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் அப்டேட் ஏதாவது கொடுங்க என தினமும் கேட்டு வருகின்றனர்.

என்ன பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா? அஜித்தின் பிறந்த நாளுக்காக இளம் இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ.!

ஆனால் படக்குழு தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைதளப் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவிடம் நான் உங்களின் தீவிர ரசிகன்.. வலிமை படம் BGM பற்றி அப்டேட் கொடுங்க எனக் கேட்டுள்ளார்.

அதற்கு யுவன் சங்கர் ராஜா காத்திருப்புக்கு ஏற்ற வகையில் தரமாக இருக்கும் என பதிலளித்துள்ளார்.

மேலும் அந்த ரசிகர் யுவனை தலை என அழைத்ததற்கு நான் தல அல்ல அஜித் சார் தான் எப்போதும் தல என பதில் கூறியுள்ளார்.

யுவனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகனை மதிக்கும் தலைவன் என ரசிகர்கள் யுவனுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

Yuvan About Valimai BGM
Yuvan About Valimai BGM