சொல்லாமல் கொள்ளாமல் துரத்தப்பட்டுள்ளார் பிரியங்கா நல்காரி. 

Priyanka Nalkari Replacement in Nala Dhamayanthi Serial : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நள தமயந்தி. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க நந்தா மாஸ்டர் ஹீரோவாக நடித்து வருகிறார்.  ‌

நாளை வேளையில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாத நிலையில் இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரியங்கா நல்காரியை சொல்லாமல் கொள்ளாமல் சீரியலில் இருந்து தூக்கி உள்ளனர். 

அவருக்கு பதிலாக தமயந்தியின் தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார் ஸ்ரீநிதி.  தெய்வம் தந்த பூவே சீரியல் நடித்த இவர் தற்போது இந்த சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். 

அதே நேரத்தில் ஸ்ரீநிதி ரெட்டி ஹீரோயின் இல்லை எனவும் இது கெஸ்ட் ரோல் தான், இந்த சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.