முத்துவால் மனோஜ்க்கு பெரிய சிக்கல் உருவாக மீனாவை கேவலமாக பேசி உள்ளார் விஜயா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் மனோஜ் தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளாமல் இருக்க முத்து ரூமில் இருந்து வெளியே வர என்னாச்சு ஏன் எல்லாம் கூடி இருக்கீங்க என்று கேட்க உங்க அண்ணன் இன்னும் எழுந்துக்கவே இல்ல என்று மீனா சொல்கிறார். அவன் வெட்டிப் பையன் எழுந்து என்ன பண்ண போறான் என்று முத்து கேள்வி கேட்க ரவி அவனுக்கு கடை இருக்குடா என்று சொல்ல ஆமால அவன் தொழிலதிபர் ஆகிவிட்டான் என்று ரூமுக்கு வர மனோஜ் தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருக்கிறார். 

இவனை எல்லாம் இப்படி எழுப்பக் கூடாது என்று முத்து தண்ணீரை கொண்டு போய் முகத்தில் ஊற்ற ஐயோ அம்மா நான் தண்ணில விழுந்துட்டேன் என்று அலறி எழுந்து கொள்கிறார் மனோஜ். அடுத்ததாக எல்லோரும் முத்துவைப்பிடித்து அப்பாவுக்கு தர வேண்டிய 27 லட்சத்தை சம்பாதித்து கொடுத்துட்டு எவ்வளவு நேரம் வேணா தூங்கு என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். 

அதைத் தொடர்ந்து மீனா கிச்சனில் இருக்க அங்கு வந்த விஜயா மனோஜ்க்கு சிக்கன் குழம்பு வச்சுட்டு ஆட்டு எலும்பா வாங்கி தொக்கா சமைச்சிடு.. ரோகிணிக்கு வெஜ் பிரியாணி பண்ணிட்டு பன்னீர் பன்னிடு என்று லிஸ்ட் போட மீனா எல்லாத்துக்கும் சேர்த்து என்ன சமைக்கணும்னு சொல்லுங்க அவங்களுக்கு தனித்தனியா சமைச்சு தர முடியாது என்று சொல்ல விஜயா ஏன் நைட்டு ரூம் கிடைக்கவில்லை என்று இப்படி சொல்றியா? அதனால தானே உன் புருஷன் அவன் மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்பினான்? என் ஒரு நாள் கூட ரூம் இல்லாம இருக்க முடியாத உனக்கு கேவலமாக இல்லையா அப்படி என்னதான் ஆசையோ என்று அவமானப்படுத்தி பேச நீங்க நாக்குல விஷத்தை வச்சிட்டு பேசாதீங்க என கண் கலங்குகிறார். பிறகு நீங்க என்ன வேணா பேசிக்கோங்க அவங்களுக்காக தனியா சமைக்க முடியாது. வேணும்னா நீங்க சமைச்சு கொடுங்க என்று வெளியே வந்து விடுகிறார். 

இதையடுத்து சுதா அண்ணாமலை வீட்டுக்கு மனோஜ் கடையில் வாங்கிய ஏசி அனுப்பி வைக்க முத்து அதைத் தெரிந்து கொண்டு சுதா வீட்டுக்கு திருப்பி அனுப்புகிறார். மேலும் சுதாவுக்கு போன போட்டு உங்க பொண்ணுக்கு செய்றதா இருந்தா துணி அவை நகையாக செய்யுங்க எங்க வீட்டுக்கு என்ன வேணுமோ அது எங்களுக்கு வாங்கிக்க தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். 

உடனே ஸ்ருதியின் அப்பா சுதாவிடம் இந்த ஏசிய நீ மனோஜ் கடையிலேயே ரிட்டன் பண்ணு.. உங்க வீட்டுக்கு அனுப்பி வச்ச முத்து அதை வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டாரு.. எங்களுக்கு இது தேவை இல்லை அப்படின்னு சொல்லு.. இதனால வீட்டுல பிரச்சனை வெடிக்கும் என்று ஐடியா கொடுக்கிறார். 

அடுத்ததாக கடையில் மனோஜ் டீலருக்கு கமிஷன் பாக்க பணத்தை கொடுத்து விட்டு முன்னாடி இருந்த ஓனரை விட மூணு மடங்காக உங்க ப்ராடக்ட் சேல் பண்ணி காட்டுறேன் என்று சொல்லி பணத்தை கொடுத்து அனுப்ப சுதா ஏசியோடு கடைக்கு வந்து ரிட்டன் பண்ண வந்திருப்பதாக சொல்லி ஷாக் கொடுக்கிறார். பொருள முத்து திருப்பி அனுப்பிட்டாரு என்று நடந்ததை சொல்ல மனோஜ் இப்பதான் பணத்தை ஏஜென்ட் கிட்ட கொடுத்து அனுப்பினேன் என்று சொல்கிறார். நீங்க பணத்தை கூட கொடுக்க தேவையில்லை என்னோட கிப்ட்டா வச்சுக்கோங்க என்று சொல்ல மனோஜ் சந்தோஷப்பட ரோகிணி ஒரு நிமிஷம் என்று பணத்தை ரெடி பண்ணி எடுத்து வந்து கொடுக்கிறார். 

இந்த முத்து ஏன் தான் இப்படி இருக்காரோ என்று சுதா கோர்த்துவிட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.