விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!
விஜய்யின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜயின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு ஒரு செம சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
அதாவது விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த மெர்சல் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
