தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தொடர்பாக இருக்கும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை விஜய் தேவர்கொண்ட வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா. இவர் தற்போது “LIGER”என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். இதில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் அவர்கள் இணைந்து நடிக்கிறார்.

நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் விஜய் தேவர்கொண்டா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தர்மா புரொடக்ஷன் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு மணி சர்மா பின்னணி இசையமைக்க விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் விஜய் தேவர்கொண்டா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து விஜய் தேவர்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது கையில் பூங்கொத்துடன் நிர்வாணமாய் நிற்பது போல் இப்படத்தின் தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் விஜய் தேவர்கொண்டா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

மேலும் அந்தப் புகைப்படத்துடன் இணைந்து ‘இந்த படம் என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. உடலளவிலும், மனதளவிலும் மிகக் கடினமான பாத்திரம். நான் உங்களிடம் எல்லாவற்றையும் கொடுக்கிறேன். விரைவில் வருகிறது “LIGER”என்று குறிப்பிட்டுள்ளார்’. இந்தப் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் விஜய் தேவர்கொண்டாவின் துணிச்சலை பாராட்டி வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.