Vijay Comments About Master Release
Vijay Comments About Master Release

மாஸ்டர் ரிலீஸ் குறித்து தளபதி விஜய் கருத்து கூறியிருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Vijay Comments About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ்..,விஷயம் என்ன தெரியுமா.?

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், சேத்தன், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 9ம் தேதியே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!

திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் எண்ணி வருகின்றனர். மாஸ்டர் படம் ரிலீஸ் செய்தால் தான் மக்களிடையே அச்சத்தைப் போக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் பிறகுதான் தியேட்டருக்கு பெரிய கூட்டம் வரும் என கணக்குப் போடுகின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜயின் ஊரடங்கு முடிந்ததும் முதல் படமாக மாஸ்டர் படம் தான் ரிலீஸாகும் என கூறியதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.