Vijay Birthday Special Motion Poster
Vijay Birthday Special Motion Poster

தளபதி விஜயின் பிறந்தநாள் மோஷன் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Vijay Birthday Special Motion Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தந்தையின் வழியாக திரையுலகில் அறிமுகமானாலும் தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

இவருக்கு வரும் ஜூன் 22-ம் தேதி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

ஆனால் விஜய் யாரும் என்னுடைய பிறந்த நாளில் எவ்வித கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.

கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா? கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க தனுஷ் ரசிகர்களே!

இருப்பினும் விஜய் ரசிகர்கள் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாட்டத்தை தொடங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜயின் பிறந்தநாளுக்கான ஸ்பெஷல் மோஷன் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.