Karnan First Look Update
Karnan First Look Update

தனுஷின் கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

Karnan First Look Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருபவர் தனுஷ்.

இவரது நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் கொரானா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் பாட்டுக்கு மாஸ் காட்டிய வடிவேலு.. பலரையும் வியக்க வைத்த காட்சி – வைரலாகும் வீடியோ.!

இந்தப் பழத்தைத் தொடர்ந்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தில் மலையாள நடிகர் லால், யோகி பாபு, லட்சுமி பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார்.

டிராப்பான தனுஷின் திருடன் போலீஸ் படம், வைரலாகும் கொல மாசான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – புகைப்படம் உள்ளே

இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90% நிறைவடைந்துள்ளன. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் படத்தின் மீதி படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வரவுள்ளன.

மேலும் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷின் பிறந்த நாளான ‌ ஜூலை 28 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.