விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளிமயில்” என்ற படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை பட குழு வெளியிட்டுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், அண்ணாதுரை, பிச்சைக்காரன், சைத்தான் போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அந்த வகையில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் “வள்ளிமயில்”. 

இந்த படத்தை நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்குகிறார். இதையடுத்து நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் ஆண்டனி இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது என்ற தகவலை வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று மாலை இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ஆண்டனி அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டரை வைரலாகி வருகின்றனர்.