புதுச்சேரியில் நடந்த ஊர்வலத்தில் நாடக கலைஞர்களுடன் செம குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனியின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி இசை இசையமைப்பாளராக பிரபலமான விஜய் ஆண்டனி தற்போது முன்னணி ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது தனது நடிப்புத் திறமை மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி தற்போது வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன், கொலை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாடகக் கலைஞர்களுடன் செம குத்தாட்டம் போட்டுள்ள விஜய் ஆண்டனியின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது சங்கரதாஸ் சுவாமிகளின் 100 வது ஆண்டு நிறைவு நாளை ஒட்டி புதுச்சேரியில் நடந்த ஊர்வலத்தில் நாடகக் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி செம குத்தாட்டம் போட்டுள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.