
ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் விடாமுயற்சி.. இதுவரை இவ்வளவு தெரியுமா?
விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் த்ரிஷா,அர்ஜுன் ,ரெஜினா, சந்திப் கிஷன், ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது என்றே சொல்லலாம்.
தற்போது ப்ரீ புக்கிங்கில் 30 முதல் 50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
