அனிருத் செய்த காரியம்: அஜித் பட பாடலை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்
‘இன்ஸ்பிரேஷனால் ஒரு படைப்பு உருவாகுவது வேறு; அப்படியே காப்பி அடித்து போடுவது வேறு’ இதற்கு உரிய விளக்கம் சம்பந்தப்பட்டவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். இங்கே, இது சம்பந்தமான சர்ச்சை பற்றிப் பார்ப்போம்..
இசையமைப்பாளர் அனிருத் தொடர் இசைப்பணிகளால் செம பிஸியில் இருக்கிறார். இந்நிலையில், அனிருத் இசையமைக்கும் பாடல்கள் ஹிட் ஆனாலும், காப்பி சர்ச்சையிலும் சிக்கி வருவது தொடர்கிறது. இருப்பினும், அனிருத்துக்கே வாய்ப்புகள் குவிகிறது.
முன்னதாக, விஜய்யின் ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற ‘ஐ எம் ஆர்டினரி பர்சன்’ பாடல் வெப்சீரிஸான பீக்கி பிளைண்டர்ஸில் இடம்பெற்ற ‘ஐ எம் நாட் ஆன் அவுட்சைடர்’ பாடலில் இருந்து எடுக்கப்பட்டதாக சர்ச்சைகள் வந்தன.
தற்போது, அஜித் படத்தின் பாடலும் காப்பி என கட்டம் கட்ட ஆரம்பித்துள்ளனர். அதாவது, ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆவேஷம்’ படத்தில் சுஷின் ஷியாம் இசையில் உருவான ‘இல்லுமினாட்டி’ பாடலின் மெட்டை காப்பியடித்து அனிருத் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சவதீக்கா’ பாடலை உருவாக்கியுள்ளார் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவ்தீகா’ பாடல் வெளியான நிலையில், இதுவரை சுமார் 3 மில்லியன் வியூஸ் வரை அந்த பாடல் அள்ளியிருக்கிறது. அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அந்த பாடலை பார்த்து டிரெண்டாக்கி வருகின்றனர்.
பாடலில் உள்ள வரிகள் எல்லாம் பெண்களை கவரும் விதத்தில் உள்ள நிலையில், டிரெண்டாகி வருகிறது.