வேட்டையன் : மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!
வேட்டையன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்றது.
டிஜே ஞானவேல் இயக்கத்திலும் லைகா ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் பகத் பாஸில், அமிதாபச்சன், துஷாரா விஜயன் ,மஞ்சு வாரியார் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய மனசிலயோ பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
தற்போது இந்த படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் 3 கோடி வரை சம்பளம் வாங்கியாதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.