ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக மாறும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்..!

ரீல் ஜோடியாக நடித்த ரியல் ஜோடியாக மாற இருக்கிறார்கள் பாக்கியலட்சுமி பிரபலங்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை பழிவாங்க திட்டம் போட்டு ரெஸ்டாரன்ட் சீல்வைத்துள்ளார்.இதிலிருந்து பாக்யா மீண்டு வருவது எப்படி? கோபி செய்ததை கண்டுபிடிப்பாரா? என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.

இந்த சீரியலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் விகாஷ் சம்பத். இவர்கள் இருவரும் பாக்கியலட்சுமி சீரியல் கணவன் மனைவியாக நடித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
