‘வேற லெவல் சார்’: வெற்றிமாறன் சொன்ன கதையை கேட்டு சிம்பு வியப்பு..

Web Ads

வடசென்னை கதைக்களத்தில் உருவாகவிருக்கும் எஸ்டிஆர் 49 படத்தின் தகவல்கள் காண்போம்..

வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் சிம்பு. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் கதை பற்றி சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கின்றது. அதாவது, சிம்பு தற்போது தாய்லாந்தில் இருப்பதால், வீடியோ காலின் மூலம் வெற்றிமாறனிடம் கதை கேட்டுள்ளார் சிம்பு.

வெற்றிமாறன் முழு கதையையும் சொன்ன பிறகு, சிம்பு அசந்துபோய் விட்டார். ‘வேற லெவல் சார்..’ என சொல்லி வெற்றிமாறனை வெகுவாக பாராட்டியுள்ளார் சிம்பு. கண்டிப்பாக, இப்படம் பிளாக்பஸ்டர் தான் என வெற்றிமாறனிடம் சிம்பு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். அந்தளவிற்கு வெற்றிமாறனின் கதை சிறப்பாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் வடசென்னை உலகில் தயாராக இருப்பதாக கூறப்பட்டது. இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த தற்போது STR 49 படத்தின் கதையும் சிறப்பாக இருப்பதாக வந்த தகவல், மேலும் இப்படத்தின் மீதான ஹைப்பை அதிகப்படுத்தி உள்ளது.

சிம்பு, சென்னை வந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வடசென்னை படத்திலேயே வெற்றிமாறனின் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்போது அது நடக்கவில்லை. பல வருடங்கள் கழித்து தற்போது வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி STR 49 படத்தின் மூலம் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vetrimaran narrated str49 story to actor silambarasan
vetrimaran narrated str49 story to actor silambarasan