பன் பட்டர் ஜாம்’ வீடியோ கிளிம்ப்ஸ் பார்த்து, விஜய் சொன்ன முதல் ரிவ்யூ
‘பன் பட்டர் ஜாம்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்..
ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று பிரபலம் அடைந்த ராஜு ஜெகன் மோகன், இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இப்படத்தில் இருந்து ஸ்டெல்லர் என்ற கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதனை, நடிகரும் தவெக தலைவருமான விஜய் பார்த்து பாராட்டியுள்ளார். அதனை நடிகர் ராஜு தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘வேற லெவல் பா.. தியேட்டருக்கு வந்து படம் பார்க்கனும்னு தோன்றுது’ என தொலைபேசியில் விஜய் பாராட்டியதாக நடிகர் ராஜு பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டிராகன்’ படத்தை சிம்பு ‘ப்ளாக் பஸ்டர்’ என ப்ரீமியர் ஷோ பார்த்து கணித்தார். பின்னர், சில நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘டிராகன்’ பார்த்து, வெகுவாக பாராட்டினார் என்பதும் நினைவுகூரத்தக்கது.
அவ்வகையில் ‘பன் பட்டர் ஜாம்’ படம் எப்படி? தளபதி விஜய்யின் முதல் ரிவ்யூ பாஸிட்டிவ் தான், எனர்ஜியாய் கொடுத்து விட்டார். ஆடியன்ஸ் ரிசல்ட்? ரிலீஸ்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.