துணிவு பட டிரைலரை பார்த்து வெங்கட் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் சமுத்திரகனி, மஞ்சுவாரிகள் சிபி சந்திரன் அமீர் பாவணி உட்பட பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ள அஜித்தின் வசனங்கள் அனல் பறக்கும் வகையில் அமைந்திருந்தன. இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த ட்ரெய்லரை பார்த்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்த அவரது பதிவில் Money Money Money.. the Bad guy is back எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக அஜித் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் தான் முதல்முறையாக நெகட்டிவ் வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.