வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஆளே மாறிப் போய் உள்ளார் நடிகர் சிம்பு. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றன.

Vendhu Thanindhathu Kaadu Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பலத்த பண மழையில், நீரஜ் சோப்ராவுக்கு சிறந்த வரவேற்பு..

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது திருச்செந்தூர் பகுதியில் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் மூன்று மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க கௌதம் மேனன் முயற்சி செய்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக நடிகை ராதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் Kamal படத்தில் இணைந்த Andrea – படக்குழு மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்! | Vikram Movie