ஈஸ்வரியை நம்பி ஏமாந்துள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி உட்கார்ந்து இருக்க ராமமூர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருக்க மற்ற பெண்கள் கிச்சனுக்குள் இருக்கும் போது கீழே இறங்கி வரும் கோபி நேராக ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்து உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்று சொல்கிறார்.

ஈஸ்வரி என்ன பேசணும் என்று கேட்க நான் நீங்க சொல்லி தானே இந்த வீட்டுக்கு வந்தேன் அப்படி இருக்கும்போது அவன் எப்படி என்ன வீட்டை விட்டு போக சொல்லலாம் என்று கேட்கிறார். ராமமூர்த்தி தலையும் இல்லாமல் வாலும் இல்லாம சொன்னா எப்படி யார் உன்னை போக சொன்னது என்று கேட்கிறார்.

இந்த நேரம் பார்த்து எழில் மற்றும் செழியன் என இருவரும் மாடியிலிருந்து கீழே இறங்கி வருகின்றனர். அவன் தான் சொன்னான் என்று கையை காட்ட ராமமூர்த்தி யார் செழியனா என்று கேட்க அவன் இல்ல எழில் என சொல்கிறார். பிறகு கீழே இறங்கி வந்த எழில் நான்தான் தாத்தா சொன்னேன். இவர் இங்கே இருக்கிறதுல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல என்று சொல்கிறார். ராமமூர்த்தி அவன் சரியா தானே சொல்லி இருக்கான் என்று சொல்ல கோபி ஈஸ்வரியிடம் நீங்க சொல்லுங்கள் மா நீங்க சொல்லி உங்களுக்காக தானே நான் இந்த வீட்டுக்கு வந்தேன் அவன் எப்படி என்னை போக சொல்லலாம் என்று கேள்வி கேட்க ஈஸ்வரி பதில் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்.

Oplus_0

அதன் பிறகு எழில் திரும்பவும் நீங்க இங்க இருக்க கூடாது வெளியே போங்க என்று சொல்ல என்ன வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நீ யாரு இது என்னுடைய வீடு நான் கட்டின வீடு என பேசிய டயலாக்கை திரும்ப பேசுகிறார். இதைக் கேட்டதும் கிச்சனிலிருந்து வெளியே வரும் பாக்கியா இது என்னுடைய வீடு. எல்லோரும் எங்க கிட்ட இருந்த கடைசி பணம் வரைக்கும் போட்டு வாங்கின வீடு. பணத்தை வாங்கிகிட்டு ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இந்த வீட்டை என் பேருக்கு மாத்தி கொடுத்தது ஞாபகம் இல்லையா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

நீங்க சொன்னா நான் போயிடணுமா? நான் என் அம்மாவுக்காக தான் இங்க வந்தேன் என் பையன் செழியன் அமைதியாக தான் இருக்கிறான் என்று கேட்க செழியன் அமைதியாக இருக்கிறேன் என்றால் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு அர்த்தம் இல்ல அவன் பேசுறது சரியா இருக்கு அதனால நான் அமைதியான இருக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அப்படியே கோபி இனியாவிடம் நகர இனியா நீங்க இங்க இருக்குறது எனக்கு புடிக்கல டாடி எரிச்சலா இருக்கு உங்கள சுத்தமா எனக்கு புடிக்கல என்று சொல்லி பாக்கியா பக்கத்தில் சென்று நிற்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரியும் உன் புள்ளைங்க ஏதாவது பண்றதுக்குள்ள நீயா இங்கிருந்து போயிடு என சொல்ல கோபி உடைந்து போய் கண்ணீருடன் நிற்கிறார். ராதிகா இதைக் கேட்டு மேலே வந்து மூட்டையை கட்ட பின்னாடியே கோபி வர நான் சொன்ன போது கிளம்பி போய் இருக்கலாம் இந்த அவமானம் எல்லாம் தேவையா என்று பிடித்து திட்டுகிறார். என் பொண்ணு இனியா என்ன டாடி டாடி என்று சொல்லுவா அவ கூட என்று கோபி புலம்ப வர ராதிகா, உங்கள பத்தி யோசிக்காதவங்களை பத்தி நீங்க எதுக்கு யோசிச்சிட்டு இருக்கீங்க இனிமே என்னால இந்த வீட்ல இருக்க முடியாது நீங்க என் கூட வரதா இருந்தா வாங்க இல்லன்னா இங்கேயே இருந்து இன்னும் அவமானப்படுங்க என்று சொல்கிறார்.

கோபி கடைசியா ஒரு முறை அம்மா கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்ல திரும்ப என்ன பேச போறீங்க? பாக்கியாவே இது என்னுடைய வீடு வெளியே போங்கனு சொல்லிட்டாங்க. உங்கள விட்டு என்னால இருக்க முடியாது நான் இங்கேயே இருக்க போறேன்னு கால்ல விழுந்து கெஞ்ச போறீங்களா என்று கோபப்படுகிறார். இல்ல அம்மாகிட்ட நாங்க கிளம்புறேன்னு மட்டும் சொல்லிட்டு வர ஒரு பைவ் மினிட்ஸ் என கோபி கீழே இறங்கி வருகிறார்.

மறுபக்கம் எழில் செழியன் பாக்கியா ஆகியோர் கோபி இனிமேல் இருக்கக் கூடாது என பேசிக்கொண்டு இருக்க ராமமூர்த்தி அங்கு வர இவர்கள் தலை குனிந்து நிற்க தலை குனிய வேண்டியவனே தலை நிமிர்ந்து நடக்கிறான் நீங்க எதுக்கு இப்படி தலை குனிகிறிங்க என்று சொல்கிறார். நீங்க சொன்னது தான் சரி அவன் இந்த வீட்டில இருக்கக் கூடாது என்று ராமமூர்த்தி சொல்கிறார்.

போதும் மாமா அவருக்காக நிறைய சலித்துக் கொண்டு போயாச்சு. இனிமேலும் அப்படி இருக்க முடியாது என்று சொல்ல ராமமூர்த்தி இது உன்னுடைய வீடு மா இங்கே யார் இருக்கனும், இருக்கக் கூடாதுனு முடிவு பண்ண வேண்டியது நீதான். கோபியோட அப்பா அம்மா எங்களையும் நீ வெளியே போனு சொன்னா நாங்க போய் தானே ஆகணும் என்று ராமமூர்த்தி சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.