வீட்டுக்கு வந்த மீனாவின் அம்மாவால் பல்பு வாங்கியுள்ளார் விஜயா. ‌ 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் கல்யாண நாள் பற்றி பேச மீனா இது கூட உங்களுக்கு ஞாபகத்துக்கு இல்ல என்று கோபப்பட முத்து எனக்கு என் கையால தாலி வாங்கி உனக்கு கோவில்ல வச்சு கட்டி விட்ட நாள் தான் கல்யாண நாளா மனசுல பதிஞ்சு இருக்கு என்று சொன்னதும் மீனா மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு இருவரும் முதல் முறையாக இங்கு சந்தித்துக் கொண்டனர் என்பது குறித்து பேசுகின்றனர். 

முத்து கல்யாணத்துக்காக உங்களை கூப்பிட்ட வந்த போது கார் மாறி கூட்டிட்டு போனபோது அதை தடுத்து நிறுத்திய போது பார்த்ததாக சொல்லு மீனா அதுக்கு முன்னாடி என்ன பார்த்ததே இல்லையா என்று கோபப்படுகிறார். பிறகு முத்துவை மீனா எங்கெல்லாம் பார்த்தார் எப்படி எல்லாம் பார்த்தார் என்பது குறித்து விவரிக்க முத்து ஆச்சரியப்படுகிறார். அதேபோல் ரிட்டயர்மென்ட் பங்க்ஷனில் மீனா முத்துவை பார்த்து பொறுக்கி என்று சொன்ன விஷயத்தை சொல்கிறார். முத்து இப்பவும் நான் பொறுக்கி தானா என்று கேட்க அப்ப எனக்கு பிடிக்காது அதனால பொறுக்கினு சொன்னேன் என்று சொல்ல அப்போ இப்போ என்று கேட்டதும் மீனா இப்ப எனக்கு புருஷனா ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். 

மறுநாள் மீனா அண்ணாமலைக்கு காபி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கும்போது மீனாவின் அம்மா வீட்டுக்கு வர அண்ணாமலையும் மீனாவும் அவரை கூட்டிட்டு வர வைத்து பேசுகின்றனர். விஜயா வந்ததும் எப்படி இருக்கீங்க என்று கேட்க விஜயா என்ன திடீர்னு இந்த பக்கம் என்று ஏன் வந்தீங்க என்பது போல கேள்வி கேட்டு மீனாவிடம் காபி கொண்டு வா என்று சொன்னதும் நான் குடிச்சிட்டு தான் வந்தேன் என்று மீனாவின் அம்மா சொல்ல நான் எனக்காக கேட்டேன் என்று சொல்கிறார். 

அதன் பிறகு நாளைக்கு மீனாவுக்கு கல்யாண நாள் என்பதால் சீர் கொண்டு வந்ததாக சொல்ல விஜயா என்ன வைர நகையா 50 சவரத்துக்கு கொண்டு வந்திருக்கீங்களா என்று கேட்டு அவமானப்படுத்துகிறார். அதன் பிறகு சுருதி வெளியே வந்ததும் மீனாவின் அம்மாவை நலம் விசாரித்து அன்னைக்கு கொண்டு வந்த முறுக்கு கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்க மீனாவின் அம்மா எடுத்துக் கொடுக்கிறார். 

ஸ்ருதி சாப்பிட போகும் போது விஜயா ஸ்ருதிமா அதெல்லாம் எதுக்கு சாப்பிடுற அவங்க எந்த எண்ணெயில செஞ்சாங்களோ என்று சொல்ல அதெல்லாம் நல்ல எண்ணெயில் தான்மா செஞ்சிருக்கேன் என்று சொல்கிறார். அதன் பிறகு கடன் வாங்கி சாப்பிடுவதை விட வீட்ல செஞ்சது சாப்பிடறது நல்லது தான் ஆன்ட்டி என்று விஜயாவுக்கு பல்பு கொடுத்து முறுக்கை சாப்பிடுகிறார் சுருதி. 

அதன் பிறகு ரோகினியை நலம் விசாரிக்கும் மீனாவின் அம்மா உங்க அப்பா ஜெயில்ல இருக்க விஷயத்தை பத்தி மீனா சொன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு சிதம்பரத்துல ஒரு கோவில் இருக்கு அங்க போயிட்டு வந்தா எல்லாம் நல்லபடியா நடக்கும் நீ ஒரு முறை அங்க போயிட்டு வா என்று சொல்ல விஜயா அதெல்லாம் எதுக்கு நீங்க சொல்லிக்கிட்டு இருக்கீங்க இங்க நடக்கிறது எல்லாம் நீங்கள் அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு தான் இருக்கியா என்று விஜயா கோபப்படுகிறார். 

பிறகு முத்து வீட்டுக்கு வர மீனாவின் அம்மா கல்யாண நாளுக்காக உங்களை கூப்பிட வந்ததாக சொல்லி துணி மணியை எடுத்துக் கொடுக்க இதெல்லாம் எதுக்கு அத்தை நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று பேசுகிறார். நான் என்ன உங்கள அத்தையாவா பார்க்கிறேன் என் அம்மாவாக தானே பார்க்கிறேன் என்று சொல்ல விஜயா அடுத்த பல்பு வாங்குகிறார். 

அதன் பிறகு மீனாவின் அம்மா கிளம்பியதும் கிச்சனில் இருக்கும் மீனாவிடம் வந்து விஜயாவும் ரோகிணியும் சண்டையிடுகின்றனர். என்னோட விஷயத்தை பத்தி உங்க வீட்டுல பேசாதீங்க என்று ரோகிணி மீனாவிடம் கோபப்படுகிறார். மீனா எங்க அம்மா உங்க நல்லதுக்காக தான் சொன்னாங்க என அப்பா இல்லாமல் ஒரு குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும்னு எங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். 

அதன் பிறகு மீனா ரூமுக்கு செல்ல விஜயா இவ முத்து கிட்ட ஏதாவது போட்டு கொடுத்து சண்டை வர வச்சிடுவாளோ என்று ரூமுக்குள் நடப்பதை ஒட்டு கேட்க முத்துவிடம் பேசிவிட்டு வெளியே வந்த மீனா இதை பார்த்து விடுகிறார். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அத்தை எனக்கு இந்த குடும்பத்தோட அமைதி ரொம்ப முக்கியம் அதனால நீங்க பேசினதெல்லாம் என் வீட்டுக்காரர் கிட்ட போட்டு சண்டை வர வைக்க மாட்டேன் என அடுத்த பதிலடி கொடுக்கிறார். 

அதைத்தொடர்ந்து முத்து மீனாவுக்காக ஒரு கிப்ட் வாங்கி வந்து அண்ணாமலையையும் விஜயாவையும் கூப்பிட்டு நிற்க வைத்து காலில் விழப்போகும் சமயத்தில் பாட்டி வீட்டுக்கு வர முத்து ஓடிப்போய் பாட்டியை தூக்கி கொஞ்ச அண்ணாமலை அம்மாவை கீழே இறக்கி விடுடா என்று சொல்கிறார். என்ன பாட்டி சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க என்று மீனா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். விஜயாவும் அதானே என்ன அத்தை திடீர்னு வந்து இருக்கீங்க, எங்க நீங்க கூட அத்தை வராங்கன்னு சொல்லவே இல்ல என்று கேட்க என் விஜயா உன்கிட்ட அனுமதி வாங்கி தான் நான் வரணுமா என்று நாச்சியார் பாட்டி கேள்வி கேட்க விஜயா அப்படியெல்லாம் இல்ல அத்தை என்று சொல்கிறார். உன் அக்கறையை பத்தி எனக்கு நல்லா தெரியும் என்று பாட்டியும் விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.