இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகி பாபு . ஆத்மியா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வெள்ளையானை”.

Vellaiyanai Release in Sun Tv : இந்த வெள்ளையானை திரைப்படத்தை “மினி ஸ்டுடியோஸ் ” தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரித்துள்ளார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்திய வீரர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடல்..

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

மாதர் சங்கத்தை கிழித்தெடுத்த வனிதா விஜயக்குமார்! – வைரலாகும் வீடியோ | Vanitha Press Meet

படத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது .