வீரப்பன் குடும்பத்தார் வைத்த வேண்டுகோள் காரணமாக யோகி பாபு நடிக்கும் படத்தின் டைட்டில் மாற்றப்பட உள்ளது.

Veerappan Khajana Movie Title Update : ’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்கு தயராகி விட்டார்.

யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதால், இவர்களுடைய கூட்டணியின் காமெடி காட்சிகள்ரொம்ப தூக்கலாகவே வந்திருக்கிறதாம்.

இப்படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற உள்ளது. ஆம், ‘வீரப்பனின் கஜானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். எனவே, இப்படத்தின் புதிய தலைப்பு, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.