Veeram Remake Hero : Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Thala AJith, Thalapathy Vijay, Shah rukh khan, Veeram
விஜய் படத்தில் நடிப்பதாக ஷாருகான் குறித்து தகவல் வைரலான நிலையில் அவர் தற்போது வீரம் அஜித்தாக நடிக்க பச்சை கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Veeram Remake Hero : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் மற்றும் தளபதி விஜய் படங்கள் பாலிவுட் சினிமாவில் ரீமேக்காவது ஒன்றும் புதிதல்ல.

தற்போது தல அஜித்தின் வீரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. பிரபல இயக்குனர் ஒருவர் ரீமேக் செய்ய உள்ள இந்த படத்தில் நடிக்க அக்ஷய் குமார் முதலில் நடிக்க கமிட்டானார்.

விராட் கோலியை கட்டியணைத்து போட்டோ எடுத்த நடிகை – கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

அதன் பின்னர் பல படங்களில் பிஸியாக இருந்து வருவதால் அவர் விலகி கொண்டு விக்கி கௌசலை பரிந்துரை செய்தார். விக்கி கௌஷலும் கமிட்டாகி விலகி கொண்டார்.

தற்போது இவர்களை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருகான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஷாருகான் விஜயுடன் பிகில் படத்தில் நடிப்பதாக வதந்திகள் காட்டு தீ போல பரவி இருந்த நிலையில் இவர் வீரம் படம் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.