வசூல் வேட்டையாடும் வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங்..முழு விவரம் இதோ..!
வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் பார்ட் 2. என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன்,எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் வருகிற 27ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இன்னும் ரிலீசுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் 1.5 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைராலகி வருகிறது.
