varalakshmi

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்று பிகில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பல திரையரங்குகளில் அதிகாலை காட்சியே திரையிடப்பட்டது. எனவே, முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் விஜய் ரசிகர்கள் பலரும் இன்று அதிகாலையே திரையரங்குகள் முன் குவிந்து விட்டனர்.

ரசிகர்கள் ஒருபுறம் எனில் பல திரையுலக பிரபலங்களும் அவர்களோடு இணைந்து பிகில் அதிகாலை காட்சியை பார்த்து ரசித்தனர். இதில், நடிகை வரலட்சுமியும் ஒருவர்.

முதல் காட்சியை பார்க்க முதல் ஆளாக தியேட்டரில் நுழைந்த அவர் ‘தளபதி இல்லாம தீபாவளி இல்லை. முதல் ஆளாக தியேட்டரில் நுழைந்துள்ளேன். ஆர்வம் அதிகமாக இருக்கிறது’ எனக் கூறி வெற்றி தியேட்டரில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.