Vanitha Vijayakumar Wishes to Arun Vijay

தன்னுடைய தம்பிக்காக வனிதா விஜயகுமார் ஒரு விஷயம் செய்ய அதனை என்னவென்று கூட கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

Vanitha Vijayakumar Wishes to Arun Vijay : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார். தன்னுடைய பெற்றோரிடம் சண்டையிட்டு இரண்டு மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்தும் மூன்றும் விவாகரத்தில் முடிந்து உள்ளது. குடும்பத்தோடு எந்தவித பிணைப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட தன்னுடைய தம்பி என்பதால் வனிதா விஜயகுமார் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அருண் விஜய் தன்னுடைய அக்கா வனிதா விஜயகுமாரின் வாழ்த்தை சற்றும் கண்டு கொள்ளவில்லை.

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அவருடைய வாழ்த்துக்கு எந்தவித பதிலும் கொடுக்காமல் அசிங்கப்படுத்தி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் உங்களை ஒரு நாள் ஏற்றுக் கொள்வார்கள். கவலைப்படாதீர்கள் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

என்ன தான் குடும்ப பிரச்சனை இருந்தாலும் வனிதாவின் பதிவிற்கு அருண் விஜய் பதில் அளித்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.