நடிகை வாணி போஜன் பதிவிட்டு இருக்கும் சிம்பிள் லுக் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Vani bhojan new look photos trending:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் வாணி போஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது வெள்ளி திரையில் ஓ மை கடவுளே, ட்ரிபிள்ஸ், மிரல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் வரிசையாக நடித்து வரும் வாணி போஜன் இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் அவ்வப்போது எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் மெல்லிய புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது லைக்குகளை குவித்து ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.