ரிலீசுக்கு முன்பாகவே வலிமை திரைப்படம் லாபத்தை குவித்து வருகிறது.

Valimai Profit Before Release : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் பல முக்கிய நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் ரிலீசுக்கு முன்பாகவே நல்ல லாபத்தை பெற்று வருவதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

என் பொண்ணு என் மானத்தை காப்பாத்திட்டாள் – Director Perarasu Emotional Speech | HD

பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை : உருக்கமான கடிதங்கள்..போலீஸ் விசாரணை..

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை 161 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாக கூறியுள்ளார். அதாவது இதுவரை பட்ஜெட்டுக்கு மேல் 11 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் படம் ரிலீசாகி வசூல் கிடைப்பதை பொறுத்து லாபம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.