Valimai
வலிமை படத்தின் தயாரிப்பில் இருந்து ஜீ தொலைக்காட்சி விலகி கொண்டதால் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கி வரும் இந்த படத்தை போனி கபூரும் ஜீ தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பொருளாதார பிரச்சனையால் ஜீ நிறுவனம் விலகி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போனி கபூரும் ஏற்கனவே இரண்டு பெரிய படங்களையும் தயாரித்து வருவதால் நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

இதனால் பிப்ரவரியில் தொடங்க இருந்த வலிமை படப்பிடிப்புகள் தள்ளி போயுள்ளது. அதற்குள் வலிமை டிராப்பாகி விட்டதாகவும் தகவல்கள் வைரலாகிட அதற்கு படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

எக்காரணத்திற்காகவும் வலிமை படம் ட்ராப்பாகாது. திட்டமிட்டமிட்டபடி அதே பட்ஜெட்டில் படம் உருவாகும், வெளியாகும் என போனி கபூரின் நிறுவனம் அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.