Valimai Bike Stunt Update
Valimai Bike Stunt Update

இந்த சீனுக்கு எல்லாம் தியேட்டரே அதிரும் என வலிமை படம் பற்றி அப்டேட் ஒன்றை பிரபலம் ஒருவர் கொடுத்துள்ளார்.

Valimai Bike Stunt Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்துள்ளன.

தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரை நம்பி படம் பண்ணுங்க கண்டிப்பா வெற்றி கிடைக்கும், விஜய் சேதுபதிக்கு தொழிலதிபரின் அட்வைஸ் – பதறிப்போய் விளக்கம் கொடுத்த சேரன்.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது படம் குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்துள்ளார்.

அதாவது சென்னையில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாம். இதில் தல அஜித் பல பைக் சாகசங்களை செய்து அனைவரையும் மிரள வைத்துள்ளாராம்.

இந்தக் காட்சிக்கு தியேட்டரே அதிரும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.