வடிவேலுவின் லைவ் டப்பிங் வீடியோவை சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருபவர் வடிவேலு. காமெடியனாக மட்டுமின்றி எதார்த்தமான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவரது நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் நடிப்பில் அடுத்ததாக பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது தொடர்ந்து இறுதி கட்டப் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக செய்து வருகிறது. இந்நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தில் வடிவேலுவின் லைவ் டப்பிங் பணியின் வீடியோவை படக்குழு எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.