வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வைரலாகும் பதிவு.!!

Web Ads

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.

vaa vaathiyaar movie release date update
vaa vaathiyaar movie release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர் தற்போது வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக சத்தியராஜ் நடித்துள்ளார் மேலும் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என்று பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான பதிவை வெளியிட்டு உள்ளனர்.

அதாவது கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியார் திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.