நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் குறித்து பேசி உள்ளார் கே எஸ் ரவிக்குமார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் படையப்பா. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடிக்க வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத பவர்ஃபுல் கில்லி கதாபாத்திரமாக நீலாம்பரி கேரக்டர் இருந்து வருகிறது. ஆனால் முதல் முதலாக இந்த வேடத்தில் நடிக்க இருந்தது ரம்யா கிருஷ்ணன் இல்லை என உண்மையை உடைத்துள்ளார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மீனாவை தான் அணுகினேன். ஆனால் அவர் வில்லி கதாபாத்திரமா அய்யய்யோ வேண்டாம் என சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாமல் நானும் ரஜினி சாரும் பெஸ்ட் ஜோடி என பலரும் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கும் போது அவருக்கு வில்லியாக நடித்தால் எனது மார்க்கெட் சரிந்து விடும் என மீனா இந்த வாய்ப்புக்கு நோ சொல்லி உள்ளார்.

அதன் பிறகு நக்மாவை அனுப்பிய போது அவரும் அந்த சமயத்தில் மற்ற சில படங்களில் பிஸியாக நடித்து வந்த காரணத்தினால் இந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளார். அதன் பின்னரே ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்தோம் என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.