பீஸ்ட் திரைப்படம் வெற்றியா தோல்வியா என்ற கேள்வியால் கடுப்பாகி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi About Beast Collection : தமிழ் சினிமாவின் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகள் கொண்டு வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். மேலும் இவர் எம்எல்ஏவாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பீஸ்ட் படம் வெற்றியா?? தோல்வியா? கேள்வியால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் - அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா??

இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்களை ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டது. இந்நிலையில் தன்னுடைய சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது அவரிடம் பீஸ்ட் படம் வெற்றியா தோல்வியா என்று கேட்கப் பட்டுள்ளது.

பீஸ்ட் படம் வெற்றியா?? தோல்வியா? கேள்வியால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் - அவர் கொடுத்த பதில் என்ன தெரியுமா??

இதனால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் நான் இங்கு அரசியல் ரீதியாக வந்துள்ளேன். படம் வெற்றியா தோல்வியா என்பதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

பலரும் பீஸ்ட் படத்தால் பெரிய நஷ்டம் என சொல்லி வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.