வெளியானது மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநரின் ‘பாலன் தி பாய்’ படத்தின் ட்ரெய்லர்

Web Ads

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பாலன் தி பாய்’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film பிரிவில் திரையிடப்பட்ட இப்படம், சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பாலன் தி பாய்’ தற்போது அதன் டிரெய்லர் மூலம் மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த டிரெய்லரை தமிழ் பதிப்புக்காக சூர்யா சிவகுமார், இந்தி பதிப்புக்காக அஜய் தேவ்கன், தெலுங்கு பதிப்புக்காக நாக சைதன்யா மற்றும் கன்னட பதிப்புக்காக ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு போன்ற ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பை இணைக்கும் வலுவான திரைக்கதையுடன் உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்வையாளர்களுக்கு சிந்திக்க வைக்கும் ஒரு உணர்வுபூர்வமான சினிமா அனுபவத்தை முன்னோட்டமாக வழங்குகிறது.

இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள நிலையில், கதையை ஜீத்து மாதவன் எழுதியுள்ளார். தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக அறியப்படும் இந்த இரு படைப்பாளிகளின் கூட்டணி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள ‘பாலன் தி பாய்’, இந்தாண்டின் முக்கியமான பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.