Top Tamil Heros in Failure Remake Movies
Top Tamil Heros in Failure Remake Movies

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியாகி பல்பு வாங்கிய ரீமேக் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Top Tamil Heros in Failure Remake Movies : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீஸாகின்றன. இவைகளில் பிற மொழி படங்களில் ரீமேக்கும் அடங்கும்.

அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்கள் பிற மொழிகளில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படங்களில் நடித்ததுண்டு.

அப்படி திரைப்படங்களால் வெளியான படங்களில் சில மாதங்களுக்கு பெற்றதும் உண்டு சில எதிர்பாராத அளவில் தோல்வியைத் தழுவியதும் உண்டு.

அந்தவகையில் மாபெரும் தோல்வியைத் தழுவிய திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. வில்லு :

தளபதி விஜய், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் வில்லு.

இந்தியில் சோல்சர் என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழில் பெரும் தோல்வியைத் தழுவியது. வடிவேல் காமெடியை தவிர படத்தில் ஒன்றுமே சரியில்லை என புலம்பாத ரசிகர்களே இல்லை.

  1. ஏகன் :

தல அஜித், நயன்தாரா நடிப்பில் ராஜூ சுந்தரம் மாஸ்டர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஏகன்.

மே ஹீம் நான் என்ற பெயரில் இந்தியில் வெளியாகி படத்தின் பட்ஜெட்டை விட நான்கு மடங்கு வசூல் செய்த இந்த படம் தமிழில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் பட்ஜெட், மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? – மிரள வைக்கும் முழு விபரம்.!

  1. ஒஸ்தி :

இயக்குனர் தரணி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய திரைப்படம் ஒஸ்தி.

இந்தியில் சல்மான்கான் நடிப்பில் தபாங் என்ற பெயரில் வெளியான இப்படம் அங்கேயே சுமாரான வரவேற்பை தான் பெற்றது. தமிழில் மோசமான விமர்சனங்களுடன் தோல்வியை தழுவியது.

  1. குட்டி :

தெலுங்குவில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் தான் குட்டி.

தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் இன்று ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் ரிலீசான போது யாரும் கண்டு கொள்ளாததால் தோல்வி படங்களின் லிஸ்டில் சேர்ந்தது.

  1. கஜேந்திரா :

விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி எதிர்பாராத தோல்வியை சந்தித்த திரைப்படம் கஜேந்திரா. இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான சிம்ஷாதிரி என்ற படத்தின் ரீமேக்.

தெலுங்குவில் ஜூனியர் என்டிஆர்க்கு பேரும் புகழும் கொடுத்த இந்த படம் தமிழில் விஜயகாந்த்துக்கு தோல்வியை தான் கொடுத்தது.

  1. வந்தா ராஜாவாகத்தான் வருவேன் :

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி தோல்வியை தழுவிய படம் வந்தா ராஜாவாகத்தான் வருவேன்.

இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அத்திரண்டிக்கு தாரெடி என்ற படத்தின் ரீமேக் தான்.

ஆனால் சுந்தர் சி விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தை பட்டி டிங்கரிங் பார்த்தது போல இயக்கியதால் தோல்வியைத் தழுவியது.