Chandramukhi Collection Report
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Chandramukhi Movie Collection Report : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

இந்தப் படத்தில் பிரபு, நாசர், வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா என இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த இந்தப் படம் ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

இந்தியாவில் மட்டும் ரூபாய் 45 கோடி வசூல் செய்துள்ளது. வெளிநாடுகளில் ரூபாய் 30 கோடி வசூல் செய்து உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 75 கோடி வசூல் செய்துள்ளது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால் இதில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.