Top 10 Movies Show Secrets Revealed By Anchor Suresh Kumar | Sun TV Top 10 Movies Show | Kollywood Cinema News | Tamil Cinema News
டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததற்கான காரணத்தை கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் டாப் 10 சுரேஷ் குமார்.

Top 10 Movies Show Secrets : சன் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடமாக ஒரே நேரத்தில் ஒரு தொகுப்பாளரை கொண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி டாப் 10 மூவிஸ். இந்த நிகழ்ச்சியை சுரேஷ் குமார் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சி முடிவிற்கு வந்து விட்டதால் தற்போது சுரேஷ் குமார் யூ ட்யூப்களில் படங்களை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் இந்த மாற்றம்? அந்த நிகழ்ச்சியை ஏன் முடித்தார்கள்? என கேள்வி கேட்டு வந்தனர். தற்போது அதற்கு பதிலளித்துள்ளார் சுரேஷ்.

அதாவது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் அதற்கேற்றார் போல மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

மேலும் முதலில் இந்த நிகழ்ச்சியில் விமர்சனம் வந்த பிறகு தான் இணையத்தளங்களில் விமர்சனம் செய்வார்கள். ஆனால் தற்போது அப்படியில்ல.

மேலும் எங்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆதரவு இல்லை.. ஒரு சிலர் ஏன் எங்க படத்துக்கு முதலிடம் கொடுக்கல என கேட்கிறார்கள். தொலைக்காட்சி சேனலில் ஒருதலை பட்ச விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என விளக்கமளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.