பாக்யா குடும்பத்தில் நடக்கும் அடுத்த நிகழ்ச்சி குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கூடிய சீக்கிரம் அமிர்தா இந்த வீட்டில வாந்தி எடுக்கணும் என்று ஈஸ்வரி கட்டளையிட ராதிகா வாந்தி எடுத்து கர்ப்பம் என கன்ஃபார்ம் ஆன நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் கோபியாக நடித்து வரும் சதீஷ்.
பாக்கியா எழில் செழியன் இனியா ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்டுள்ள போட்டோவை வெளியிட்டுள்ள சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் அப்கம்மிங் எபிசோட் என தெரிவித்துள்ளார்.
செழியன் ஜெனி குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்கள் ராதிகாவுக்கு வளைகாப்பு அதுக்கு ஈஸ்வரி கேட்டரிங் சர்வீஸா என கிண்டல் அடித்து வருகின்றனர்.