வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Title Look of Vaadivasal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தைத் தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா நாற்பது என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில், 19-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு.?

இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக வைத்து உருவாகி வரும் படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. டைட்டில் லுக் போஸ்டர் செம மாஸாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Vijay-க்கு ஒரு நியாயம்.., Sachin-னுக்கு ஒரு நியாயமா? கடுப்பான பிரபலங்கள்.! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.