200 கோடி வசூலை தாண்டியும் வாரிசு இன்னும் லாபம் தரவில்லை என சொல்லப்படுகிறது.

Thunivu Vs Varisu Profit Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதி கொண்டன.

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகின்றன. இரண்டு படமும் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

இருந்த பதிலும் வாரிசு படத்தின் பட்ஜெட் அதிகம் என்ற காரணத்தினால் இன்னும் படம் லாபத்தை தரவில்லை என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படம் லாபத்தை எட்ட இன்னும் 50 கோடி வரை வசூல் செய்ய வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் துணிவு படத்தின் பட்ஜெட் வாரிசை விட கம்மி என்பதால் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து லாபத்தை கொடுக்க தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.