பொங்கல் ரேஸில் வெளியாகப் போகும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள்..!

பொங்கல் ரேஸில் வெளியாகப் போகும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

Three consecutive films to release in Pongal race
Three consecutive films to release in Pongal race

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதிகம் வரவேற்பு கொடுப்பது உண்டு. அதுவும் குறிப்பாக தற்போது பொங்கல் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்த படங்கள் பொங்கலுக்கு விருந்தாக வெளியாக உள்ளது. ஏற்கனவே ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களின் ரிலீஸ் தேதி அறிவித்து உள்ளனர்.

கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படமும் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த தெறி படத்தின் ரீ ரிலீஸ் ஜனவரி 15ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இனி அடுத்தடுத்து படங்கள் வெளியாகி பொங்கல் ரேஸ் களைகட்ட தயாராகியுள்ளது. இந்தத் திரைப்படங்களில் நீங்கள் எந்த திரைப்படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Three consecutive films to release in Pongal race
Three consecutive films to release in Pongal race