Viswasam Movie Stills

Thookku Durai Ajith : தமிழகத்தில் பல இடங்களில் இந்த பொங்கலுக்கு தூக்குதுரையின் அலப்பறை தான் என்பதால் அஜித் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வாசம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டு படங்களில் பெரும்பாலும் விஸ்வாசம் படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், வேலூர், திருவண்ணாமலை போன்ற இடங்களில் அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளன.

அதே போல தமிழகத்தை தாண்டி கேரளாவிலும் பேட்ட படத்திற்கு கிடைத்துள்ள தியேட்டர்களை விட விஸ்வாசம் படத்திற்கு கிடைத்துள்ள தியேட்டர்களே அதிகம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.